2 - திங்கள் மாலைப் புகழ்



பாடல் 

ஒளியின் ஊற்றே எம்செபம் ஏற்று அழிவின் ஊற்றாம் பாவம் போக்கி எழில்பெற எமக்கு உம்மொளி பொழிக. 

உழைக்கும் நேரம் முடிவுற உமது அழைப்பை ஏற்று உம்புகழ் பாட விழிப்புடன் திருமுன் விருப்புடன் வந்தோம். 

இந்தாள் பரிந்த பாலம் அனைத்தும்                          முன்னாள் எமக்காய் ஒளியைக் கொணர்ந்த                             மன்னன் கிறிஸ்து மாய்த்திடுவாரே 

தந்தை மைந்தன் தூய ஆவியும் எந்தை இறையாய் எக்காலத்திலும்                    அந்தமில் லாப்புகழ் மாட்சி பெறுக. ஆமென். 

(எழுந்து நிற்கவும்)
__________________________

(அமரவும்)

மு.மொழி.1: மானிட மைந்தருள் பேரழகுப் பெருமகன் நீர், உம் இதழினின்று அருள் வெள்ளம் பாய்ந்து வரும்.

அரசரின் திருமணப்பாடல்
திபா 45

மன்னரைக் குறித்து யான் கவிதை புனைகின்ற போழ்து
இனியதொரு செய்தியால் என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது.
திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே
மானிட மைந்தருள் பேரழகுப் பெருமகன் நீர்
உம் இதழினின்று அருள் வெள்ளம் பாய்ந்து வரும்
கடவுள் உமக்கு என்றென்றும் ஆசி வழங்குகின்றார்.

வீரமிகு மன்ன! மாட்சியொடு உம் மாண்பும் துலங்கிடவே
உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்
உண்மையைக் காத்திட நீதியை நிலைநாட்டிட
மாண்புடன் வெற்றி வாகை சூடி வாரும்
உம் வலக்கை அச்சமிகு செயல்களை ஆற்றுவதாக
உம்முடைய கணைகள் கூரியன
மன்னர்தம் மாற்றாரின் நெஞ்சினிலே பாய்வன
மக்களெல்லாம் உம் காலடியில் வீழ்ந்திடுவர்.

இறைவனே என்றுமுளது உமது அரியணை
கோல் அதி பாக்கு வெறுப்பு
எனவே கடவுள் உமக்கே உரிய கடவுள்
மகிழ்ச்சியின் நெய்யால் உமக்குத் திருப்பொழிவு செய்து
உம் அரசை தோழரினும் மேலாய்
உம்மை உயர்த்தினார்.

நறுமணத் துகள் அகிலொடு இலவங்கத்தின்
மணங்கலமும் உம் ஆடையெலாம்
தந்தம் இழைத்த மாளிகைதனிலே
யாழிசை உம்மை மகிழ்விக்கும்
அருமை மிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்
ஒரின் பொன் அணிந்து வடிவாக
வலப்புறம் நிற்கின்றான் பட்டத்து அரசி

மு.மொழி.: மானிட மைந்தருள் பேரழகுப் பெருமகன் நீர், உம் இதழினின்று அருள் வெள்ளம் பாய்ந்து வரும்.
__________________________

மு.மொழி. 2: இதோ மணமகன் வருகிறார்; அவரை எதிர்கொள்ள வாருங்கள்

                               Il

கேளாய் மகளே!
கருத்தாய் காது கொடுத்துக் கேள்
உன் இனத்தாரை மறந்து விடு
பிறந்தகம் மறந்து விடு
உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்
உன் தலைவர் அவரே அவரைப் பணிந்திடு

தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்
செல்வமிகு சீமான்கள் உன்னருள் வேண்டி நிற்பர்
அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி
தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.

பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம்
அவளை அழைத்து வருவர்
கன்னித் தோழியர் புடைசூழ
அவள் அடியெடுத்து வந்திடுவாள்
மன்னவரின் மாளிகைக்குள் நுழையும் போது
அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்
அழைத்து வரப்படுவர்.
உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்
அவர்களை நீர் உலகுக்கெலாம் இளவரசர் ஆக்கிடுவீர்
என் பாடல் வழிவழியாய் உம் பெயரை நிலைக்கச் செய்யும்
ஆகையால் எல்லா இனத்தாரும் உமை வாழ்த்திடுவர்.

மு.மொழி.: இதோ மணமக வருகிறார்; அவரை எதிர்கொள்ள வாருங்கள்
___________________________

மு.மொழி. 3:  கால நிறைவில் விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள். 

மீட்பின் திட்டம்                    எபே 1:3-10

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின
தந்தையும் கடவுளுமானவர் போற்றி
அவர் விண்ணகம் சார்ந்த ஆவிக்குரிய ஆசி அனைத்தையும்
கிறிஸ்து வழியாக நம்மீது பொழிந்துள்ளார்.

நாம் தூயோராகவும் மாசற்றோராகவும்
 தம் திருமுன் விளங்கும்படி
உலகம் தோன்றுவதற்கு முன்பே
கடவுள் நம்மைக் கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார்.

அவர் நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம்
தமக்குச் சொந்தமான பிள்ளைகளாக்கிக் கொள்ள
அன்பினால் முன் குறித்து வைத்தார்
இதுவே அவரது விருப்பம் இதுவே அவரது திருவுளம்
இவ்வாறு தம் அன்பார்ந்த மகன் வழியாக
நம்மீது ஒப்புயர்வற்ற அருளைப் பொழிந்தருளியதால்
அவரது புகழைப் பாடுகிறோம்.

கிறிஸ்து இரத்தம் சிந்தி தம் அருள் வளத்திற்கு ஏற்ப
 நமக்கு மீட்பு அளித்துள்ளார்
 இம்மீட்பால் குற்றங்களிலிருந்து
நாம் மன்னிப்புப் பெறுகிறோம்
 அந்த அருளை அவர் நம்மில் பெருகச் செய்து
 அனைத்து ஞானத்தையும் அறிவுத்திறனையும் தந்துள்ளார்.

அவர் தமது திருவுளத்தின் மறைபொருளை
நமக்கு தெரியப்படுத்தியுள்ளார்
இது கிறிஸ்து வழியாகக்
கடவுள் விருப்பம் செய்த தீர்மானம்
காலம் நிறைவில் விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை
அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில்
ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள்,

மு.மொழி.: கால நிறைவில் விண்ணிலுள்ளவை மண்ணிலுள்ளவை அனைத்தையுமே கிறிஸ்துவின் தலைமையில் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற திட்டமே அம்மறைபொருள். 
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு              1 தெச 2:13

கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக்கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தைதான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது.

__________________________

சிறு மறுமொழி

℣ - ஆண்டவரே என் செபம் உம் திருமுன் வருவதாக. 
℟ - ஆண்டவரே என் செபம் உம் திருமுன் வருவதாக. 

℣ -  தூபம்போல் அது உம் திருமுன் எழுவதாக.
℟ - ஆண்டவரே என் செபம் உம் திருமுன் வருவதாக. 

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் ஆட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே என் செபம் உம் திருமுன் வருவதாக. 
__________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

மரியாவின் பாடல்

மு.மொழி.:  ஆண்டவரை என் உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.

ஆண்டவரை எனது உள்ளம் 
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது. 
என் மீட்பராம் கடவுளை நினைத்து 
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின் 
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.

இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் 
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள் 
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். 
தூயவர் என்பதே அவரது பெயர்.

அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் 
தலைமுறை தலைமுறையாய் 
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்; 
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் 
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; 
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; 
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் 
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் 
என்றென்றும் இரக்கத்தோடு 
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் 
துணையாக இருந்து வருகிறார் ".

மு.மொழி.: ஆண்டவரை என் உள்ளம் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
__________________________

மன்றாட்டுக்கள்

திருச்சபையை அன்பு செய்து ஆதரிக்கின்ற ஆண்டவராகிய கிறிஸ்துவுக்கு நாம் நன்றி செலுத்துவோம்.

℟ - ஆண்டவரே இந்த மாலை நேரத்தில் எங்களோடு இருந்தருளும்

  ஆண்டவராகிய இயேசுவே, எல்லா மானிடரும் மீட்படைய வழி வகுத்தருளும் அனைவரும் உம்மை அறிந்து கொள்ளச் செய்தருளும்.

℟ - ஆண்டவரே இந்த மாலை நேரத்தில் எங்களோடு இருந்தருளும்

நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் பலவீனர்களுக்கும் இறப்பவர்களுக்கும் உமது கருணையைக் காட்டியருளும் உமது ஆறுதலை அவர்களுக்கு அளித்தருளும்.

℟ - ஆண்டவரே அனைவரையும் உம்பால் ஈர்த்துக்கொள்ளும்.

வாழ்க்கையில் துன்பங்களிலும் ஏமாற்றங்களிலும் உழல்பவர்களுக்கு தேவையான துணையைக் கொடுத்தருளும் அவர்களின் வாழ்வின் நோக்கங்களைப் புதுப்பித்தருளும்.

℟ - ஆண்டவரே அனைவரையும் உம்பால் ஈர்த்துக்கொள்ளும்.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________

ஆண்டவரின் செபம்
__________________________

இறுதி செபம்

 எல்லாம் வல்ல இறைவா, தகுதியற்ற ஊழியர்களாகிய எங்களுக்கு இந்நாள் முழுவதும் உழைப்பதற்கான வலிமையைத் தந்துள்ளீர்; உமது கொடைகளுக்கு நன்றியாக இம்மாலை வேளையில் நாங்கள் ஒப்புக்கொடுக்கும் புகழ்மாலையை ஏற்றுக்கொள்ளுமாறு மன்றாடுகிறோம். உம்மோடு......

__________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.