2 - செவ்வாய் காலைப் புகழ்
பாடல்
(எழுந்து நிற்கவும்)
ஒளியைப் படைத்த இறைவா
ஒளியின் முழுமையும் பகலும் நீரே
இரவின் இருளை என்றுமே அறியாப்
பொருளே ஒளியின் உட்பொருள் நீரே
வானம் வெளுத்தது நாளும் விடிந்தது
கானம் பாடி மகிழ்ந்து எழுந்தோம்
பகலவன் ஒளியால் பகல்வந் ததுபோல்
தூயவர் நீரெம் வேண்டுதல் கேட்பீர்
அகஇருள் அகல்க ஒளிபிறந் திடுக.
தியவை தீய உலகப் பற்று
மாய்கை மயக்கம் அனைத்தும் அகற்றி
தூயவ ராகஉம் திருமுன் நிற்போம்.
எரியும் கோபமும் புகையும் பகையும்
எரிந்து உணவுப் பிரியம் தணிந்து
சிற்றின் பத்தின் பற்றுதல் அணைந்து
முற்றிலும் உமக்குப் பணிபுரி வோமே.
திடமுள மனமும் கற்புள உடலும்
வடுவிலா வாழ்வும் வாழ்த்துப் பாடலும்
நிறைந்த நாளாய் இந்நாள் மலர்ந்திடக்
கிறிஸ்துவே உம்மருள் நிறைவாய்த் தருக.
இச்செபம் இரங்கி ஏற்பீர் தந்தாய்
உச்ச நிலையமர் உம்திரு மகனும்
அச்சம் அகற்றும் தூய ஆவியும்
இச்செகம் உம்முடன் ஆளுக என்றும் ஆமென்.
___________________________
(அமரவும்)
மு.மொழி.1: ஆண்டவரே உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்.
நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு
திபா 43
கடவுளே என் நேர்மையை நிலைநாட்டும்
இறைப் பற்றில்லா இனத்தோடு
என் வழக்குக்காக வாதிடும்
வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த
மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும்
ஏனெனில் கடவுளே நீரே என் ஆற்றல்
ஏன் என்னை ஒதுக்கித் தள்ளி விட்டர்,
எதிரியால் ஒடுக்கப்பட்டு
நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்
உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்
அவை என்னை வழிநடத்தி உமது திருமலைக்கும்
உமது உறைவிடத்திற்கும் கொண்டு போய்ச் சேர்க்கும்
அப்பொழுது நான் கடவுளின் படம் செல்வேன்
என் மனமகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்
கடவுளே என் கடவுளே யாழிசைத்து
ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன்.
என் நெஞ்சே நீ நம்பிக்கை இழப்பது என்
நீ கலக்கமுறுவது ஏன்
கடவுளையே நம்பியிரு
என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு
இன்னும் நான் அவருக்கு நன்றி செலுத்துவேன்,
மு.மொழி.: ஆண்டவரே உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும்.
__________________________
மு.மொழி. 2: ஆண்டவரே எம் வாழ்நாளெல்லாம் எமக்கு உதவி புரிந்தருளும்.
கடுந்துயரும் நலம் பெற்றதன் மகிழ்வும்
எசா 38:10-14 ,17-20
என் வாழ்நாள்களின் நடுவில்
இவ்வுலகை விட்டுச் செல்ல வேண்டுமே
நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப்
பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே என்றேன்
வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே
மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும்
என்னால் பார்க்க முடியாதே என்றேன்.
என் உறைவிடம் மேய்ப்பனின்
கூடாரத்தைப் போல் பெயர்க்கப்பட்டு
என்னைவிட்டு அகற்றப்படுகிறது
நெசவாளன் பாவைச் சுருட்டுவது போல்
என் வாழ்வை முடிக்கிறேன்
தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார்
காலை தொடங்கி இரவுக்குள் எனக்கு முடிவு கட்டுவீர்.
துணை வேண்டிக் காலை வரை கதறினேன்
சிங்கம் போல் அவர் என் எலும்புகள்
அனைத்தையும் நொறுக்குகிறார்
காலை தொடங்கி இரவுக்குள்
நீர் எனக்கு முடிவு கட்டுவீர்.
சிட்டுக்குருவி போலும் நாரை போலும் கூக்குரலிடுகிறேன்
மாடப் புறா போல் விம்முகிறேன்
மேல் நோக்கிப் பார்த்து என் கண்கள் சோர்வடைந்தன
என் தலைவரே நான் ஒடுக்கப்படுகிறேன்
எனக்குத் துணையாய் இரும்.
இதோ என் கசப்புமிகு அனுபவத்தை நலமாக மாற்றினீர்
மனங்கனிந்து அழிவின் க
என் உயிரைக் காத்தி
என் பாவங்கள் அனைத்தையும்
உம் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டர்,
பாதாளம் உம்மைப் போற்றிப் பாடாது
சாவு உம்மைப் புகழ்ந்து ஏத்தாது
பாதாளக் குழிக்குள் இறங்குவோர்
நம்பிக்கைக்குரிய உம்மை நம்பியிருப்பதில்லை.
நான் இன்று உம்மைப் புகழ்வதுபோல்
வாழ்வோரே வாழ்வோர் மட்டுமே
உம்மைப் போற்றிப் பாடுவர்
தந்தையர் தம் பிள்ளைகளுக்கு
உமது வாக்குப் பிறழாமை குறித்துப் போதிப்பர்.
ஆண்டவர் எனக்கு நலமளிக்க மனம் கொண்டார்
ஆண்டவரின் இல்லத்தில் எம் புகழ்ப்பாக்களை
வாழ்நாளெல்லாம் இசைக்கருவி மீட்டிப் பாடுவோம்.
மு.மொழி.: ஆண்டவரே எம் வாழ்நாளெல்லாம் எமக்கு உதவி புரிந்தருளும்.
___________________________
மு.மொழி. 3: கடவுளே சீயோனில் உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது.
நன்றிப் புகழ்ப்பா
திபா :65
கடவுளே சியோனில் உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது
உமக்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் சால்புடையது
மன்றாட்டுக்களைக் கேட்கின்றவரே
மானிடர் யாவரும் உம்மிடம் வருவர்
எங்கள் பாவங்களின் பளுவை
ஆனால் நீர் எங்கள் குற்றப் பழிகளைப் போக்குகின்றீர்.
வைத்துக்கொள்ளும் மனிதர் பேறுபெற்றோர்
நீர் தேர்ந்தெடுத்து உம்மருகில்
வைத்துக்கொள்ளும் மனிதர் பேறுபெற்றோர்
உம் கோவிலின் முற்றங்களில் அவர்கள் உறைந்திடுவர்
உமது இல்லத்தில் உமது திருமிகு கோவிலில் கிடைக்கும்
நன்மைகளால் நாங்கள் நிறைவு பெறுவோம்
அஞ்சத்தகு செயல்களை நீர் புரிகின்றீர்.
எங்கள் மீட்பின் கடவுளே
உமது நீதியின் பொருட்டு
எங்கள் மன்றாட்டுக்கு மறுமொழி பகர்கின்றீர்
உலகின் கடையெல்லை வரை வாழ்வோர் அனைவருக்கும்
தொலையிலுள்ள தீவுகளில் உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே.
வல்லமையை இடைக்கச்சையாகக் கொண்ட நீர்
உமது ஆற்றலால் மலைகளை உறுதிப்படுத்துகின்றீர்
கடல்களின் இரைச்சலையும்
அவற்றின் அலைகளின் ஓசையையும்
மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றீர்
உலகின் கடையெல்லை வரை வாழ்வோர்
உம் அருஞ்செயல்களைக் கண்டு அஞ்சுவர்
கிழக்கு முதல் மேற்கு வரை உள்ளோரைக்
களிகூரச் செய்கின்றீர்.
மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும்
நிலவளத்தையும் பெருக்கினீர்
கடவுளின் ஆறு கரை புரண்டோடியது
தானியங்களை நிரம்ப வினையம் செய்தது
அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளி
அதன் பாடசால்களில் தண்ணி நிறைந்தோடச் செய்தி
அதன் கரையோர நிலங்களைப் பாம்படித்து
ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்
உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன
பாலை நிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன
குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன
பொன்மழையால் மிருதுவாக்கினி
அதன் வளமைக்கு ஆசி வழங்கினி,
பல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன
பள்ளத்தாக்குகள் தானியங்களால்
தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன
அவற்றில் எங்கும் ஆரவாரம், எம்மருங்கும் இன்னிசை,
மு.மொழி.: கடவுளே சீயோனில் உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு 1தெச 5:4-5
அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப்போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள், நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.
__________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே எனது குரலைக் கேட்டருளும். ஏனெனில் நான்
உமது வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறேன்.
℟ - ஆண்டவரே எனது குரலைக் கேட்டருளும். ஏனெனில் நான்
உமது வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறேன்.
℣ - வைகறையில் எழுந்து உமது அருள் துணையை வேண்டுகிறேன்
℟ - ஆண்டவரே எனது குரலைக் கேட்டருளும். ஏனெனில் நான்
உமது வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறேன்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே எனது குரலைக் கேட்டருளும். ஏனெனில் நான்
உமது வார்த்தையில் நம்பிக்கை வைக்கிறேன்.
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவரே எம்மை வெறுப்போர் பிடியிலிருந்து எம்மை மீட்டருளும்
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: ஆண்டவரே எம்மை வெறுப்போர் பிடியிலிருந்து எம்மை மீட்டருளும்
__________________________
மன்றாட்டுக்கள்
ஆண்டவரே நம் ஆண்டவர் உயிர்த்தெழுந்து அச்சத்தினின்று உலகினை விடுவித்தார். நாம் அவரைப் புகழ்வோம்.
℟ - ஆண்டவரே உண்மையை நோக்கி எங்களை வழிநடத்தும்.
ஆண்டவரே நாங்கள் எம் மன்றாட்டுக்களை இக்காலைப்பொழுதில் உமக்கு காணிக்கையாக்குகிறோம் - எங்களுடைய கவலைகள் நம்பிக்கைகள் தேவைகள் அனைத்திலும் நீர் எங்களைக் கண்காணித்தருளும்
℟ - ஆண்டவரே உண்மையை நோக்கி எங்களை வழிநடத்தும்.
ஆண்டவராகிய இயேசுவே, உம்மீது நாங்கள் கொண்ட அன்பை இன்று ஆழப்படுத்தியருளும் – நாங்கள் எல்லாவற்றிலும் எங்கள் நலத்தையும் பிறர் நலத்தையும் தேடச் செய்தருளும்.
℟ - ஆண்டவரே உண்மையை நோக்கி எங்களை வழிநடத்தும்
ஆண்டவராகிய இயேசுவே, எங்களுடைய சொந்த துன்ப,துயரங்களில் இருந்து பிறரது துன்பங்களைக் கண்டுணரச் செய்தருளும் – அவர்களுக்கு உமது பரிவன்பை நாங்கள் காட்டத் துணைபுரியும்.
℟ - ஆண்டவரே உண்மையை நோக்கி எங்களை வழிநடத்தும்
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, உலகின் உண்மை ஒளியே, எல்லா மக்கள் மீதும் உமது மீட்பின் ஒளியை ஒளிரச் செய்கின்றீர். இவ்வுலகில் நீதியையும் அமைதியையும் நிலைநாட்டுவதன் வழியாக உமது வருகையை நாங்கள் பறைசாற்றிட அருள்புரியும். உம்மோடு.......
__________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.