3 - ஞாயிறு காலைப் புகழ்

3 - ஞாயிறு காலைப் புகழ்

 பாடல்  (பக்கம் எண்: 15 )

(எழுந்து நிற்கவும்)

_____________________________

(அமரவும்)

மு.மொழி.1:  ஆண்டவர் உன்னதத்தில் உயர்ந்தவர். அல்லேலூயா. 

கடவுளின் அரசாட்சி 
 தி.பா 93 

ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்
அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்
ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார்
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.

உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது
நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர்
ஆண்டவரே ஆறுகள் குதித்தெழுந்தன
ஆறுகள் இரைச்சலிட்டன
ஆறுகள் ஆரவாரம் செய்தன.

பெருவெள்ளத்தின் இரைச்சலையும்
கடலின் ஆற்றல்மிகு பேரலைகளையும் விட
ஆண்டவர் வலிமை மிக்கவர்
அவரே உன்னதத்தில் உயர்ந்தவர்
உம்முடைய ஒழுங்கு முறைகள் மிகவும் உறுதியானவை
ஆண்டவரே என்றென்றும் தூய்மையே
உமது இல்லத்தை அழகு செய்யும்.


மு.மொழி.:  ஆண்டவர் உன்னதத்தில் உயர்ந்தவர். அல்லேலூயா. 
_____________________________

மு.மொழி. 2: ஆண்டவரே நீர் என்றென்றும் வாழ்த்தும், புகழும்
பெறுவீராக. அல்லேலூயா.
தானி (இ) 1:34-65 (பக்கம் 17)

மு.மொழி.: ஆண்டவரே நீர் என்றென்றும் வாழ்த்தும், புகழும்
பெறுவீராக. அல்லேலூயா.
______________________________

மு.மொழி. 3: 

மு.மொழி.: 
______________________________

(எழுந்து நின்று வாசிக்கவும்)

அருள்வாக்கு            எசே 37:12b-14 

தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன்.  உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன்.  உங்களுக்கு இஸ்ரயேல் நாட்டைத் திரும்பக் கொடுப்பேன். அப்போது 
என் மக்களே! நான் உங்கள் கல்லறைகளைத் திறந்து உங்களை அவற்றிலிருந்து  வெளிக் கொணர்கையில், நானே ஆண்டவர்  என்பதை அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை உங்கள் மீது  பொழிவேன். நீங்களும் உயிர் பெறுவீர்கள். நானும் உங்களை  உங்கள் சொந்த நாட்டில் குடியமர்த்துவேன். ஆண்டவராகிய நான் உரைத்தேன்; நானே இதைச் செய்தேன் என அப்போது அறிந்து  கொள்வீர்கள் என்கிறார் தலைவராகிய ஆண்டவர். 

_____________________________

சிறு மறுமொழி

℣ - உயிருள்ள கடவுளின் மகனாகிய கிறிஸ்துவே எம்மீது இரக்கம் வையும்.
℟ - உயிருள்ள கடவுளின் மகனாகிய கிறிஸ்துவே எம்மீது இரக்கம்  வையும். 


℣ - :தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவர் நீரே. 
℟ - உயிருள்ள கடவுளின் மகனாகிய கிறிஸ்துவே எம்மீது இரக்கம் வையும்.

℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - உயிருள்ள கடவுளின் மகனாகிய கிறிஸ்துவே எம்மீது இரக்கம் வையும்.
_____________________________

(அனைவரும் எழுந்து நிற்கவும்)

செக்கரியாவின் பாடல்

மு.மொழி.: ஆண்டவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.  அல்லேலூயா

இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். 
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.

தம் தூய இறைவாக்கினர் வாயினால் 
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் 
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;

நம் பகைவரிடமிருந்தும் 
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் 
நம்மை மீட்பார்.

அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, 
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் 
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.

இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் 
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி 
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், 
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை 
அவர்தம் மக்களுக்கு அறிவித்து 
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த 
அவர் முன்னே செல்வாய்.

இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் 
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் 
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.

மு.மொழி.: ஆண்டவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். அல்லேலூயா

_____________________________

மன்றாட்டுக்கள்

நம் அனைவருடைய உள்ளங்களுக்கும்  புத்தொளி கொடுப்பதற்காகத் தூய ஆவியை அனுப்பிய தந்தையிடம்  வேண்டுவோம். 

℟ -  ஆண்டவரே உமது ஆவியின் ஒளியைத் தாரும்.

எல்லா ஒளிகளுக்கும் ஊற்றாகிய நீர் போற்றப்பெறுவீராக –
படைப்பனைத்தும் உம்மைப் புகழ்வது தகுமே.

℟ - ஆண்டவரே உமது ஆவியின் ஒளியைத் தாரும்.

உம்முடைய திருமகனின் உயிர்ப்பினால் உலகையே நீர்
ஒளியினால் நிரப்பியுள்ளீர் – உம்முடைய ஆவியின்
அருட்கொடையினால் திருச்சபையில் உமது ஒளி கடரட்டும்.

℟ - ஆண்டவரே உமது ஆவியின் ஒளியைத் தாரும்.

(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________

ஆண்டவரின் செபம்
_____________________________

இறுதி செபம்

வல்லமைமிக்க இறைவா, சிறந்த கொடைகள் அனைத்தையும் எங்களுக்கு அளிப்பவர் நீரே. உம்மீது நாங்கள் ஆழ்ந்த அன்பு கொள்ள செய்தருளும். எங்களிடம் கடவுள் பக்தியை வளர்த்து நன்மைகளை பெருகச் செய்து அவற்றை பராமரித்து பாதுகாத்தருளும். உம்மோடும் தூய ஆவியாரோடும் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற எங்கள் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகின்றோம். ஆமென்.
_____________________________

ஆசி வழங்குதல்

குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக 
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக 

குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக. 
எல்: ஆமென் 

குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள் 
எல்: இறைவா உமக்கு நன்றி 

(அல்லது)

முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக 
எல்: ஆமென் 

முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக 
எல்: இறைவா உமக்கு நன்றி.