3 - புதன் காலைப் புகழ்
பாடல் (பக்கம் 51)
(எழுந்து நிற்கவும்)
___________________________
(அமரவும்)
மு.மொழி.1: ஆண்டவரே, உம் அடியானின் மனத்தை மகிழக்
செய்யும்; என் தலைவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை
உயர்த்துகின்றேன்.
உதவிக்காக வேண்டல்
திபா 86
ஆண்டவரே எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்
னெனில் நான் எளியவன்; வறியவன்; என் உயிரைக் காத்தருள
னெனில் நான் உம்மீது பற்றுடையவன்
-ம் ஊழியனைக் காத்தருளும், நீரே என் கடவுள்
என் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்.
என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்
எனெனில் நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்
உம் அடியானின் மனத்தை மகிழச்செய்யும்
என் தலைவரே! உம்மை நோக்கி
என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்
எனெனில் என் தலைவரே நீர் நல்லவர்; மன்னிப்பவர்
உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்.
ஆண்டவரே என் வேண்டுதலுக்குச் செவிகொடும்
உம் உதவியை நாடும் எம் குரலைக் கேட்டருளும்
என் துன்பநாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்
நீரும் எனக்குப் பதிலளிப்பீர்
என் தலைவரே தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவருமில்லை
உமது செயல்களுக்கு ஒப்பானவை எவையுமில்லை
என் தலைவரே நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும்
உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்
உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.
ஏனெனில் நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்
நீர் ஒருவரே கடவுள் ! ஆண்டவரே உமது உண்மைக்கேற்ப
நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும்
உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்
என் தலைவரே! என் கடவுளே
என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்
என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன்
ஏனெனில் நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது
ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்
கடவுளே செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்
கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது
அவர்களுக்கு உம்மைப் பற்றிய நினைவே இல்லை.
என் தலைவரே நீரோ இரக்கமிகு இறைவன்
அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்
பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்
என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்
உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்.
உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்
நன்மைத்தளத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்
என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்
ஏனெனில் ஆண்டவராகிய நீர்தாமே
எனக்குத் துணை செய்து ஆறுதல் அளித்துள்ளீர்.
மு.மொழி.: ஆண்டவரே, உம் அடியானின் மனத்தை மகிழக்
செய்யும்; என் தலைவரே, உம்மை நோக்கி என் உள்ளத்தை
உயர்த்துகின்றேன்.
__________________________
மு.மொழி. 2: நீதி நெறியில் நடப்பவர், நேர்மையானவற்றைப் பேசுபவர்
பேறுபெற்றவர்.
ஆண்டவர் நீதியுடன் ஆள்வார்
எசா 33:13-16
தொலையில் உள்ளோரே நான் செய்வதைக் கேளுங்கள்
அருகில் உள்ளோரே என் ஆற்றலை அறிந்து கொள்ளுங்கள்
சீயோன்வாழ் பாவிகள் அஞ்சுகின்றனர்
இறைப்பற்றில்லாரைத் திகில் ஆட்கொள்கின்றது
சுட்டெரிக்கும் நெருப்பில் நம்மில் எவர் தங்குவார்
என்றென்றும் பற்றியெரியும் தழலில் நம்மில் எவர் இருப்பார்?
நீதிநெறியில் நடப்பவர், நேர்மையானவற்றைப் பேசுபவர்
கொடுமை செய்து பெற்ற வருவாயை வெறுப்பவர்
கையூட்டு வாங்கக் கைநீட்டாதவர்
இரத்தப்பழிச் செய்திகளைச் செவிகொடுத்துக் கேளாதவர்
தியவற்றைக் கண்கொண்டு காணாதவர்
அவர்களே உன்னதங்களில் வாழ்வர்
கற்பாறைக் கோட்டைகள் அவர்களது காவல் அரண் ஆகும்
அவர்களுக்கு உணவு வழங்கப்படும்
தண்ணீர் தரப்படுவதும் உறுதி,
மு.மொழி.: நீதி நெறியில் நடப்பவர், நேர்மையானவற்றைப் பேசுபவர் பேறுபெற்றவர்.
___________________________
மு.மொழி. 3: ஆண்டவராகிய அரசரை ஆர்ப்பரித்துப் போற்றுங்கள்.
அனைத்து உலகின் தலைவர் . திபா 98
ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்
ஏனெனில் அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார்
அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும்
அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.
ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்
பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்
இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட
தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவு கூர்ந்தார்
உலகெங்குமுள்ள அனைவரும்
நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
உலகெங்கும் வாழ்வோரே
அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்
மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்
யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்
யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்
ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி
கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்.
கடலும் அதில் நிறைந்தவையும்
உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக
ஆறுகளே கைகொட்டுங்கள்; மலைகளே ஒன்று கூடுங்கள்
ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்
ஏனெனில் அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்
பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்
மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
மு.மொழி.: ஆண்டவராகிய அரசரை ஆர்ப்பரித்துப் போற்றுங்கள்.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு யோபு 1:21; 2: 10
என் தாயின் கருப்பையினின்று பிறந்த மேனியனாய் யான்
வந்தேன்; அங்கே திரும்புகையில் பிறந்த மேனியனாய் யான்
செல்வேன். ஆண்டவர் அளித்தார்; ஆண்டவர் எடுத்துக் கொண்டார்;
ஆண்டவரது பெயர் போற்றப்பெறுக! நன்மையைக் கடவுளிடமிருந்து
பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?
__________________________
சிறு மறுமொழி
℣ - இறைவா என் இதயத்தை உம் திருவுளத்திற்கு
ஏற்புடையதாக்கியருளும்.
℟ - இறைவா என் இதயத்தை உம் திருவுளத்திற்கு
ஏற்புடையதாக்கியருளும்.
℣ - உம் வார்த்தையால் எனக்கு வாழ்வளித்தருளும்.
℟ - இறைவா என் இதயத்தை உம் திருவுளத்திற்கு ஏற்புடையதாக்கியருளும்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - இறைவா என் இதயத்தை உம் திருவுளத்திற்கு
ஏற்புடையதாக்கியருளும்.
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவரே உமது இரக்கத்தை எமக்கு காட்டியருளும். உமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளும்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: ஆண்டவரே உமது இரக்கத்தை எமக்கு காட்டியருளும். உமது உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளும்.
__________________________
மன்றாட்டுக்கள்
இயேசு கிறிஸ்துவில் கடவுள் நம்மை எவ்வாறு அன்பு செய்தாரென்று அறிகிறோம் அவருடைய அன்பின் மீது நாம் கொண்ட நம்பிக்கை புதுப்பிப்போம்
℟ - ஆண்டவராகிய இயேசுவே, நீர் எம்மை அன்பு செய்து,
நினைவு கொண்ட நம்பிக்கையைப் புதுப்பிப்போம்.
வருங்காலத்தை நிர்ணயிப்பவர் நீர் ஒருவரே – என்ன நடக்கப்
போகிறதோ என்னும் அச்சத்தினின்றும் நம்பிக்கை இன்மையினின்றும் எங்களைக் காத்தருளும்.
℟ - ஆண்டவராகிய இயேசுவே, நீர் எம்மை அன்பு செய்து,
நினைவு கொண்ட நம்பிக்கையைப் புதுப்பிப்போம்.
தனக்கென எதையும் தேடும் பேராசை அன்பிற்கு இல்லை
இன்று எங்கள் தன்னலத்தை மேற்கொள்ள எங்கள் உள்ளத்தைத்
திடப்படுத்தும்.
℟ - ஆண்டவராகிய இயேசுவே, நீர் எம்மை அன்பு செய்து,
நினைவு கொண்ட நம்பிக்கையைப் புதுப்பிப்போம்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
இறைவனாகிய ஆண்டவரே! உமது ஞானத்தில் எங்களைப்
படைத்து, உமது பராமரிப்பால் எங்களை ஆண்டு நடத்துகிறீர்.
தூய ஒளியால் எங்கள் இதயத்தின் உள் ஆழத்தை நிரப்பியருளும்.
அதனால் எங்கள் வாழ்வு எப்போதும் உமக்கு பிரமாணிக்கமுள்ள
ஊழியமாக அமைவதாக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்
__________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.