3 - சனி காலைப் புகழ்
3 - சனி காலை செபம்
முதல்: இறைவா எமக்குத் துணைபுரிய வாரும்
எல்: ஆண்டவரே எனக்குத் துணைபுரிய விரைைந்து வாரும்
முதல்: தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
எல்: தொடக்கத்தில் இருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
__________________________
பாடல் (பக்கம் 87)
(எழுந்து நிற்கவும்)
__________________________
(அமரவும்)
மு.மொழி.1: ஆண்டவரே! நீர் என் அருகில் இருக்கின்றீர்; உம்கட்டளைகள் எல்லாம் நிலையானவை.
திபா 119 : 145-152
முழு இதயத்தோடு உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; ஆண்டவரே! என் மன்றாட்டைக் கேட்டருளும்; உம் விதிமுறைகளை நான் பின்பற்றுவேன்.
உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என்னைக் காத்தருளும்; உம் ஒழுங்குமுறைகளை நான் கடைப்பிடித்தேன்.
வைகறையில் நான் உம்மிடம் வந்து உதவிக்காக மன்றாடுகின்றேன்; உம் சொற்களில் நம்பிக்கை வைக்கின்றேன்.
உம் வாக்குறுதிகளைச் சிந்திப்பதற்காக, இரவுச் சாம நேரங்களில் நான் கண்விழித்துள்ளேன்.
ஆண்டவரேஆண்டவரே! உமது பேரன்பிற்கேற்ப என் குரலைக் கேட்டருளும்; உமது நீதியின்பபடி என்னுயிரைக் காத்தருளும்.
சதிசெய்து ஒடுக்குவோர் என்னை நெருங்கி வருகின்றனர்; உம் திருச்சட்டத்துக்கும் அவர்களுக்கும் வெகு தொலைவு.
ஆண்டவரே! நீர் என் அருகில் இருக்கின்றீர்; உம் கட்டளைகள் எல்லாம் நிலையானவை.
அவற்றைஅவற்றை நீர் எக்காலத்திற்குமாக ஏற்படுத்தினீர் என்று நீர் தந்த ஒழுங்குமுறைகளினின்று முன்பே நான் அறிந்திருக்கின்றேன்.
மு.மொழி.1: ஆண்டவரே! நீர் என் அருகில் இருக்கின்றீர்; உம்கட்டளைகள் எல்லாம் நிலையானவை.
__________________________
மு.மொழி. 2: ஆண்டவரே உமது ஞானம் என்னோடு இருந்து என்னில்
செயலாற்றுவதாக.
ஞானம் அருளும்படி மன்றாட்டு சாஞா 9:1-6; 9-10
மூதாதையரின் கடவுளே இரக்கத்தின் ஆண்டவரே
நீர் எல்லாவற்றையும் உமது சொல்லால் உண்டாக்கினீர்
நீர் உண்டாக்கிய படைப்புகளின் மேல் ஆட்சி செலுத்தவும்
தூய்மையோடும் நீதியோடும் உலகை ஆளவும்
நேர்மையான உள்ளத்தோடு தீர்ப்பு வழங்கவும்
உமது ஞானத்தால் மானிடரை உருவாக்கினீர்
உமது அருகில் வீற்றிருக்கும் ஞானத்தை எனக்கு அருளும்
உம் பிள்ளைகளிடமிருந்து என்னைத் தள்ளிவிடாதீர்.
நான் உம் அடியான்; உம்முடைய அடியவளின் மகள்
வலுவற்ற மனிதன்; குறுகிய வாழ்வினன்
நீதித்தீர்ப்பும் திருச்சட்டமும் பற்றிச் சிற்றறிவு படைத்தவன்
மன்பதையில் ஒருவர் எத்துணை நிறைவு உள்ளவராய் இருந்தாலும்
உம்மிடமிருந்து வரும் ஞானம் அவருக்கு இல்லையேல்
அவர் ஒன்றும் இல்லாதவராய்க் கருதப்படுவார்.
ஞானம் உம்மோடு இருக்கின்றது; உம் செயல்களை அது அறியும்;
நீர் உலகத்தை உண்டாக்கியபோது அது உடனிருந்தது
உம் பார்வைக்கு உகந்ததை அது அறியும்
உம் கட்டளைகளின்படி முறையானது
எது எனவும் அதற்குத் தெரியும்.
உமது தூய விண்ணகத்திலிருந்து அதை அனுப்பியருளும்
உமது மாட்சிமிக்க அரியணையிலிருந்து அதை வழங்கியருளும்
அது என்னோடு இருந்து உழைக்கட்டும்.
அதனால் உமக்கு உகந்ததை நான் அறிந்து கொள்வேன்
அது எல்லாவற்றையும் அறிந்து உய்த்துணரும்
என் செயல்களில் விவேகத்துடன் என்னை வழிநடத்தும்
தன் மாட்சியால் அது என்னைப் பாதுகாக்கும்.
மு.மொழி.: ஆண்டவரே உமது ஞானம் என்னோடு இருந்து என்னில் செயலாற்றுவதாக.
___________________________
மு.மொழி. 3: ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு
மிகப்பெரியது.
திபா 117
பிற இனத்தாரே! நீங்கள் அனைவரும் ஆண்டவரைப் போற்றுங்கள்! மக்களினத்தாரே! நீங்கள் அனைவரும் அவரைப் புகழுங்கள்!
ஏனெனில், ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு மிகப்பெரியது; அவரது உண்மை என்றென்றும் நிலைத்துள்ளது. அல்லேலூயா!
மு.மொழி.: ஆண்டவர் நமக்குக் காட்டும் மாறாத அன்பு
மிகப்பெரியது.
___________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு பிலி 2.14-15
தலைமுறையினரிடையே குற்றமும் கபடுமற்றவர்களாய் கடவுளின் ஏனெனில் அவர் வருகிறார். முணுமுணுக்காமலும் வாதாடாமலும் யாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுதுதான் நீங்கள் நெறிகெட்ட மாசற்ற குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள்.
_________________________
சிறு மறுமொழி
℣ -ஆண்டவரே, நீரே என் புகலிடம்; உம்மையேநான்
கூவியழைத்தேன்
℟ - ஆண்டவரே, நீரே என் புகலிடம்; உம்மையே நான் கூவியழைத்தேன்
℣ - வாழ்வோர் நாட்டில் நீரே எனக்கு எல்லாம்.
℟ - ஆண்டவரே, நீரே என் புகலிடம்; உம்மையே நான் கூவியழைத்தேன்
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே, நீரே என் புகலிடம்; உம்மையே நான் கூவியழைத்தேன்
__________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவரே, இருளிலும் இறப்பின் பிடியிலும்
இருப்போர்க்கு உமது ஒளியைத் தந்தருளும்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: ஆண்டவரே, இருளிலும் இறப்பின் பிடியிலும்
இருப்போர்க்கு உமது ஒளியைத் தந்தருளும்.
__________________________
மன்றாட்டுக்கள்
காலங்களுக்கெல்லாம் முன்பாகவே கடவுள் மரியாவைக்
கிறிஸ்துவின் தாயாகத் தேர்ந்துகொண்டார். எனவே அவர்
விண்ணிலும் மண்ணிலுமுள்ள அனைத்துப் படைப்புகளுக்கும்
மேலானவர். அவரோடு சேர்ந்து நாமும் செபிப்போம்.
℟ - ஆண்டவரை உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
மரியா உமது குரலுக்குச் செவி கொடுத்து உமது வார்த்தையானவரை உலகிற்குக் கொண்டு வந்தார் – உமது அழைத்தலுக்குச் செவிகொடுத்து நாங்களும் உம் திருக்களைமக்களிடம் கொண்டு செல்வோமாக
℟ - ஆண்டவரை உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
திருச்சிலுவையின் அடியில் நின்ற மரியாவுக்கு ஆற்றலைக் கொடுத்து இயேசுவின் உயிர்ப்பின் போது அவரை மகிழ்ச்சியால் நிரப்பினீர் – அவருடைய பரிந்துரையால் எங்களுடைய துயரத்தைத் கொண்டு தணித்து நம்பிக்கையை உறுதிப்படுத்துவீராக.
℟ - ஆண்டவரை உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
__________________________
ஆண்டவரின் செபம்
__________________________
இறுதி செபம்
ஆண்டவராகிய இறைவா, நீரே எமது மீட்புக்குத் தொடக்கமும் ஊற்றுமாயிருக்கின்றீர்; எமது இவ்வுலக வாழ்வினால் மாட்சியை வெளிப்படுத்தவும், விண்ணகத்தில் முடிவின்றி நாங்கள் உம்மைப் போற்றிப் புகழவும் செய்தருள்வீராக. உம்மோடு தூய ஆவியாரின் ஒன்றிப்பில் இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து ஆட்சிபுரியும் எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.
_______________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.