4 - ஞாயிறு மாலைப் புகழ் 2
4 - ஞாயிறு மாலைப் புகழ்
பாடல் (பக்கம் 22)
(எழுந்து நிற்கவும்)
_____________________________
(அமரவும்)
மு.மொழி.1: வைகறை கருவுயிர்த்த பனியைப்போல் உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். அல்லேலூயா
திபா 110 : 1-5, 7 (பக்கம் 24)
மு.மொழி.: வைகறை கருவுயிர்த்த பனியைப்போல் உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். அல்லேலூயா.
_____________________________
மு.மொழி. 2: நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
கடவுளுக்கு அஞ்சி நடப்போர்
திபா 112
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்
அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர்
அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமை மிக்கதாய் இருக்கும்
நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும்
சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்
அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்.
இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வார்
அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர்
மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்
அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர்
எந்நாளும் அவர்கள் அசைவுறார்
நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர்.
தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது
ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால்
அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும்
அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்
அவர்களை அச்சம் மேற்கொள்ளாது
இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி.
அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்
அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்
அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்
தீயோர் அதைப்பார்த்து எரிச்சல் அடைவர்
பல்லை நெரிப்பர்; சோர்ந்து போவர்
தீயோரின் விருப்பமெல்லாம் வீணாய்ப்போம்.
மு.மொழி. 2: நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.
______________________________
மு.மொழி. 3: கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள். அல்லேலூயா.
திவெ 19:1, 2, 5-7 (பக்கம் 26)
மு.மொழி.: கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள். அல்லேலூயா.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு எபி 12:22-24
நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை, வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர். விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவு பெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும் புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்தமுறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.
_____________________________
சிறு மறுமொழி
℟ - நம் ஆண்டவர் மிகப்பெரியவர். அவரது ஆற்றல் மாண்பு
மிக்கது
℣ - நாங்கள் உமது வியத்தகு செயல்களை எடுத்துரைக்கிறோம்.
℟ - நம் ஆண்டவர் மிகப்பெரியவர். அவரது ஆற்றல் மாண்பு
மிக்கது
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - நம் ஆண்டவர் மிகப்பெரியவர். அவரது ஆற்றல் மாண்பு
மிக்கது
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
மரியாவின் பாடல்
மு.மொழி.: என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. அல்லேலூயா.
ஆண்டவரை எனது உள்ளம்
போற்றிப் பெருமைப் படுத்துகின்றது.
என் மீட்பராம் கடவுளை நினைத்து
எனது மனம் பேருவகை கொள்கின்றது.
ஏனெனில் அவர் தம் அடிமையின்
தாழ்நிலையைக் கண்ணோக்கினார்.
இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும்
என்னைப் பேறுபெற்றவர் என்பர்.
ஏனெனில் வல்லவராம் கடவுள்
எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.
தூயவர் என்பதே அவரது பெயர்.
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத்
தலைமுறை தலைமுறையாய்
அவர் இரக்கம் காட்டி வருகிறார்.
அவர் தம் தோள் வலிமையைக் காட்டியுள்ளார்;
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச்
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்;
தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.
பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்;
செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.
மூதாதையருக்கு உரைத்தபடியே அவர்
ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும்
என்றென்றும் இரக்கத்தோடு
நினைவில் கொண்டுள்ளார்;
தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத்
துணையாக இருந்து வருகிறார் ".
மு.மொழி.: என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம்
பேருவகை கொள்கின்றது. அல்லேலூயா.
_____________________________
மன்றாட்டுக்கள்
திருச்சபையில் கடவுள் தமது மறைவான திட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்; அனைத்தையும் கிறிஸ்துவில் ஒன்றாக்க விரும்புகிறார். அவருடைய திட்டம் நிறைவேற நாம் மன்றாடுவோம்.
℟ - தந்தையே, கிறிஸ்துவில் அனைத்தையும் ஒன்று
சேர்த்தருளும்.
உமது அன்பை பறைசாற்றும் பணியாளர்களுக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம் நாங்கள் பகிர்ந்து வாழும் குழுமங்களுக்கு ஊழியம் புரியத் துணை செய்யும்.
℟ - தந்தையே, கிறிஸ்துவில் அனைத்தையும் ஒன்று
சேர்த்தருளும்.
போர், பகைமை போன்றவற்றின் கொடுமைகளை உம்மக்கள் நன்குணர்ந்துள்ளார்கள் உம் திருமகன் விட்டுச்சென்ற அமைதியை அவர்கள் அனுபவிக்க அருள்புரியும்.
℟ - தந்தையே, கிறிஸ்துவில் அனைத்தையும் ஒன்று
சேர்த்தருளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________
ஆண்டவரின் செபம்
_____________________________
இறுதி செபம்
எல்லாம் வல்ல கடவுளே, நாங்கள் உம்மை அப்பா என அழைக்கத் துணிகின்றோம். நீர் வாக்களித்த உரிமைச் சொத்தாகிய வான்வீட்டில் நாங்கள் வந்து சேரும்படி நிறைவான அருளை எங்களுக்குத் தந்தருளும். உம்மோடு......
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.