4 - சனி காலைப் புகழ்
பாடல் (பக்கம் 175)
(எழுந்து நிற்கவும்)
_____________________________
(அமரவும்)
மு.மொழி.1: உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பை எடுத்துரைப்பதும் நன்று.
திபா 92 (பக்கம் 175)
மு.மொழி.: உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று. காலையில் உமது பேரன்பை எடுத்துரைப்பதும் நன்று.
_____________________________
மு.மொழி. 2: நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்; புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.
இஸ்ரயேலின் புதுவாழ்வு
எசே 36:24-28
நான் உங்களை வேற்றினத்தாரிடமிருந்து அழைத்து
பல நாடுகளிடையே கூட்டிச் சேர்த்து
உங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பக் கொணர்வேன்
நான் தூய நீரை உங்கள்மேல் தெளிப்பேன்
நீங்கள் உங்கள் எல்லா அழுக்கிலிருந்தும் தூய்மையாவீர்கள்
உங்கள் எல்லாச் சிலை வழிபாட்டுத் தீட்டையும் அகற்றுவேன்.
நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருளுவேன்
உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு
புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்
சதையாலான இதயத்தைப் பொருத்துவேன்.
என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.
என் நியமங்களைக் கடைப்பிடிக்கவும்
என் நீதிநெறிகளைக் கவனமாய்ச் செயல்படுத்தவும் செய்வேன்
நான் உங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில்
நீங்கள் வாழ்வீர்கள்
அப்போது என் மக்களாய் இருப்பீர்கள்
நான் உங்கள் கடவுளாய் இருப்பேன்.
மு.மொழி.: நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன்; புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்.
______________________________
மு.மொழி. 3: ஆண்டவரே, பாலகரின் மழலையிலும் குழந்தைகளின்
மொழியிலும் உம்மைப் புகழ்ந்தேத்தச் செய்தீர்.
திபா 8 (பக்கம் 178)
மு.மொழி.: ஆண்டவரே, பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் உம்மைப் புகழ்ந்தேத்தச் செய்தீர்.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு பேது 3:13-15
அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும்; புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம் ஆகவே அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய் நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள். நம் ஆண்டவரின் பொறுமையை மீட்பு எனக் கருதுங்கள்.
_____________________________
சிறு மறுமொழி
℣ - ஆண்டவரே, உம்மைப் பாடும்போது என் இதயம் மகிழ்ச்சி
கொள்ளும்.
℟ - ஆண்டவரே, உம்மைப் பாடும்போது என் இதயம் மகிழ்ச்சி
கொள்ளும்.
℣ - என் நா உம் நீதியின் வரலாற்றை எடுத்துரைக்கும்.
℟ - ஆண்டவரே, உம்மைப் பாடும்போது என் இதயம் மகிழ்ச்சி
கொள்ளும்.
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - ஆண்டவரே, உம்மைப் பாடும்போது என் இதயம் மகிழ்ச்சி
கொள்ளும்.
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: ஆண்டவரே, எம் கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யும்.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: ஆண்டவரே, எம் கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யும்.
_____________________________
மன்றாட்டுக்கள்
கடவுளுடைய கொடை பயப்படும் மனநிலையல்ல; மாறாக, ஆற்றலும் அன்பும் சுய கட்டுப்பாடும் உள்ள ஆவியாகும். எனவே, முழு நம்பிக்கையோடு நாம் வேண்டுவோம்.
℟ - தந்தையே, உம் ஆவியை எங்களுக்கு அனுப்பியருளும்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றி கிறிஸ்துவில் நீர் எங்களுக்கு எல்லா ஞான ஆசியையும் கொடுத்துள்ளீர்.
℟ - தந்தையே, உம் ஆவியை எங்களுக்கு அனுப்பியருளும்.
தூய ஆவியின் ஆற்றலால் மரியா கிறிஸ்துவை உலகிற்குக் கொடுத்தார் – திருச்சபையின் வழியாக இன்று கிறிஸ்து மீண்டும் மனித உள்ளங்களில் பிறப்பாராக.
℟ - தந்தையே, உம் ஆவியை எங்களுக்கு அனுப்பியருளும்.
தூய ஆவி எங்களை தனிமையிலிருந்து வெளிக் கொணர்வாராக – குருடருக்குப் பார்வை கொடுக்கவும், ஒளியின் வார்த்தையைப் பறைசாற்றவும், வாழ்வின் நிறைவை நாங்கள் கண்டுகொள்ளவும் அவர் எங்களை வழிநடத்திச் செல்வாராக.
℟ - தந்தையே, உம் ஆவியை எங்களுக்கு அனுப்பியருளும்.
உமது இறையரசுக்காக நாங்கள் எடுக்கும் முயற்சிகள் சுயநலத்தாலோ, அச்சத்தாலோ குன்றிவிடாமல் இருக்கட்டும் படைப்பனைத்தும் தூய ஆவியால் புத்துயிர் பெறவும் எங்கள் இல்லங்கள் எல்லாம் உலகம் மீட்படைந்தது என்பதற்குச் சான்று பகரவும் அருள்புரியும்.
℟ - தந்தையே, உம் ஆவியை எங்களுக்கு அனுப்பியருளும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________
ஆண்டவரின் செபம்
_____________________________
இறுதி செபம்
எல்லாம் வல்ல நித்திய கடவுளே, உண்மை ஒளியின் முடிவில்லா வாழ்வின் பெருஞ்சுடரே, இக்காலை வேளையில் பாவ இருளை அகற்றி, உமது வருகையின் மகிமையால் எம் உள்ளங்களை நிரப்பியருளும். உம்மோடு.....
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.