4 - வெள்ளி காலைப் புகழ்
பாடல் (பக்கம் 166)
(எழுந்து நிற்கவும்)
_____________________________
(அமரவும்)
மு.மொழி.1: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே
படைத்தருளும்.
திபா 51 (பக்கம் 75)
மு.மொழி.: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே
படைத்தருளும்.
_____________________________
மு.மொழி. 2: எருசலேமே அக்களிப்பாயாக. ஏனெனில் எல்லா இனத்தவரும் உன் வழியாக ஆண்டவர் திருமுன் ஒன்று சேர்க்கப்படுவர்.
விடுதலை பெற்ற மக்களின் நன்றி தோபி 13: 10-13, 15
அனைவரும் புகழ் பாடுங்கள்
எருசலேமில் அவரைப் போற்றுங்கள்
திருநகரான எருசலேமே
உம் மக்களுடைய செயல்களின் பொருட்டே
அவர் உன்னைத் தண்டிப்பார்
நீதிமான்களின் பிள்ளைகள் மீது மீண்டும் இரக்கங் காட்டுவார்.
உமது கூடாரம் உமக்காக மீண்டும்
மகிழ்ச்சியுடன் அமைக்கப்படும்
நாடு கடத்தப்பட்ட உங்கள் அனைவரையும் இன்புறுத்தி
நலிவுற்ற உங்கள் அனைவர்மீதும்
தலைமுறை தோறும் அன்பு செலுத்துவாராக
உலகின் எல்லைகள் வரை பேரொளி சுடர்க
தொலையிலிருந்து பல நாடுகள் எருசலேமிடம் வரும்
உலகின் எல்லா எல்லைகளிலிருந்தும் மக்கள்
உமது திருப்பெயர் விளங்கும் இடத்திற்கு வருவார்கள்.
விண்ணக வேந்தருக்குத் தம் கைகளில்
காணிக்கை ஏந்தி வருவார்கள்
எல்லாத் தலைமுறைகளும் உன்னில் மகிழ்ந்து பாடும்
தெரிந்து கொள்ளப்பெற்ற நகரின் பெயர்
தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும்.
வாரீர் நீதிமான்களின் மக்களைக் குறித்து மகிழ்வீர்
ஏனெனில் அவர்கள் அனைவரும் மீண்டும் ஒன்றுகூடுவர்
என்றுமுள ஆண்டவரைப் போற்றுவர்
உன்னிடம் அன்பு கொண்டோர் பேறுபெற்றோர்
உன் நிறைவாழ்வு கண்டு மகிழ்வோர் பேறுபெற்றோர்.
மு.மொழி.: எருசலேமே அக்களிப்பாயாக. ஏனெனில் எல்லா இனத்தவரும் உன் வழியாக ஆண்டவர் திருமுன் ஒன்று சேர்க்கப்படுவர்.
______________________________
மு.மொழி. 3: சீயோனே உன் கடவுளைப் புகழ்வாயாக. அவரே தம் வார்த்தையை உலகிற்கு அனுப்பினார்.
திபா 147: 12 – 20 (பக்கம் 168)
மு.மொழி.: சீயோனே உன் கடவுளைப் புகழ்வாயாக. அவரே தம் வார்த்தையை உலகிற்கு அனுப்பினார்.
______________________________
(எழுந்து நின்று வாசிக்கவும்)
அருள்வாக்கு கலா 2:19-20
கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே இனி வாழ்பவன் நானல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்பு கூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.
_____________________________
சிறு மறுமொழி
℣ - மாட்சிமிக்க கடவுளை நான் வேண்டினேன். ஏனெனில்
அவரே என் துணை
℟ - மாட்சிமிக்க கடவுளை நான் வேண்டினேன். ஏனெனில்
அவரே என் துணை
℣ - விண்ணிலிருந்து அவர் எனக்குத் துணை வழங்கி
மீட்பளிப்பாராக
℟ - மாட்சிமிக்க கடவுளை நான் வேண்டினேன். ஏனெனில்
அவரே என் துணை
℣ - தந்தைக்கும் மகனுக்கும் தூய ஆவியாருக்கும் மாட்சி உண்டாவதாக
℟ - மாட்சிமிக்க கடவுளை நான் வேண்டினேன். ஏனெனில்
அவரே என் துணை
_____________________________
(அனைவரும் எழுந்து நிற்கவும்)
செக்கரியாவின் பாடல்
மு.மொழி.: நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம்.
ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்.
தம் தூய இறைவாக்கினர் வாயினால்
தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே
அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில்
வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்;
நம் பகைவரிடமிருந்தும்
நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும்
நம்மை மீட்பார்.
அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி,
தமது தூய உடன்படிக்கையையும்,
நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும்
நிறைவேற்ற நினைவு கூர்ந்தார்.
இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத்
தூய்மையோடும் நேர்மையோடும்
வாழ்நாளெல்லாம் அச்சமின்றி
அவர் திருமுன் பணிசெய்யுமாறு வழிவகுத்தார்.
குழந்தாய்,
நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்;
ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை
அவர்தம் மக்களுக்கு அறிவித்து
ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த
அவர் முன்னே செல்வாய்.
இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரவும்,
நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும்
நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும்
விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடிவருகிறது.
மு.மொழி.: நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.
_____________________________
மன்றாட்டுக்கள்
இயேசு கிறிஸ்து தம் திருச்சிலுவை மரணத்தால் அமைதியைக் கொண்டு வந்தார். நாம் அவரிடம் வேண்டுவோம்.
℟ - ஆண்டவராகிய இயேசுவே, இன்று எம்மிடம் வாரும்.
நாங்கள் உமது சாவுக்குள் திருமுழுக்குப் பெற்றோம் – நாங்கள் பேராசை, பொறாமை ஆகியவற்றிலிருந்து தூய்மை அடைந்து, உமது அன்பின் ஆற்றலாலும் சாந்த குணத்தாலும் உடுத்தப்படுவோமாக.
℟ - ஆண்டவராகிய இயேசுவே, இன்று எம்மிடம் வாரும்.
எங்களிடம் அனுப்பப்பெற்ற தூய ஆவியால் நாங்கள் அர்ச்சனை பெற்றோம் – உமது ஊழியத்தில் எங்களை உறுதிப்படுத்தும்.
℟ - ஆண்டவராகிய இயேசுவே, இன்று எம்மிடம் வாரும்.
(தனிப்பட்ட தேவைகளுக்காக மன்றாடல்)
_____________________________
ஆண்டவரின் செபம்
_____________________________
இறுதி செபம்
ஆண்டவராகிய கடவுளே, செபத்தில் ஒன்றுபட்டிருக்கும் எங்களுக்கு உமது அருளை ஏராளமாய் வழங்கி, உமது கற்பனைகளைக் கடைப்பிடிக்கத் துணைபுரியும். அதனால் நாங்கள் இவ்வுலகில் ஆறுதல் பெற்று, மறுவுலகில் எல்லையில்லா மகிழ்ச்சி அடைவோமாக. உம்மோடு.....
_____________________________
ஆசி வழங்குதல்
குரு: ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
எல்: உம் ஆன்மாவோடும் இருப்பாராக
குரு: எல்லாம் வல்ல இறைவன் தந்தை மகன் தூய ஆவியார் உங்களை ஆசீர்வதிப்பாராக.
எல்: ஆமென்
குரு: கிறிஸ்துவின் அமைதியில் சென்று வாருங்கள்
எல்: இறைவா உமக்கு நன்றி
(அல்லது)
முதல்: ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து தீமைகள் அனைத்தினின்றும் பாதுகாத்து முடிவில்லா வாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக
எல்: ஆமென்
முதல்: ஆண்டவரை வாழ்த்துவோமாக
எல்: இறைவா உமக்கு நன்றி.